பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய தொழிலாளர்கள் மறியல்

திருப்பூர், நவ.14: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல், மின் கம்பங்களை எடுத்து செல்லுதல் அவசர வேலைகளை செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.380 வழங்க உத்தரவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், தீபாவளிக்கான கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உடுமலை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது.அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலி உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன் சிறப்புரையாற்றினார். லிங்கவேல் வாழ்த்தி பேசினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: