பஸ் டயர் வெடித்ததால் பயணிகள் பாதிப்பு

வால்பாறை, நவ.14: வால்பாறை மலைப்பாதையில் அரசு பஸ்சின் டயர் வெடித்து பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டது. பஸ்சில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பகல் ஒரு மணிக்கு வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியிலுள்ள டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை அருகே பஸ் வந்தபோது திடீரென டயர் வெடித்து பஸ் பழுதாகி பாதி வழியில் நின்றது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஸ்டெப்னி டயர் இல்லாததால் பின்னால் வந்த பஸ்களில் பயணிகள் ஏற்றி விடப்பட்டனர். வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. பழுதான டயர்களை மாற்ற ஸ்டெப்னியும் இருப்பதில்லை. இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: