கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரம் இல்லாத பொது கழிப்பிடம்

ஊட்டி, நவ. 14:  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது கழிப்பிடம் போதிய சுகாதாரம் இன்றி உள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகின்றனர். மேலும், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும் வருகின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அவசர தேவைகளுக்கு செல்ல பொது கழிப்பிடம் இல்லாத நிலையில், கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு ெபாது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பித்திற்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. மேலும், திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், வழி போக்கர்களும் இதனை பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த கழிப்பிடம் சுகாதாரம் இன்றி உள்ளது. கடும் இரு நாற்றமும் வீசுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அதனை நகராட்சி நிர்வாகம் கண்டுக் கொள்வதில்லை. மேலும், இப்பகுதியில் கார்கள் நிறுத்திக் கொள்வதால், பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படை–்டுள்ளது. எனவே, இந்த கழிப்பிடத்திற்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்திட வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், வழி போக்கர்கள் பயன்படுத்தாத வகையில் கழிப்பிடத்தை சுற்றிலும் சுவரோ அல்லது தடுப்புகளோ அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: