பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் வட்ட கிளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். திருப்பூர் வட்டக்கிளை துணைத் தலைவர் மாயன் குட்டி வரவேற்றார். திருப்பூர்

வட்டக் கிளைச் செயலாளர் மகுடேஸ்வரன் கோரிக்கையை விளக்கி பேசினார். 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கியதை் போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கியதைப்போல் மாதந்தோறும் மருத்துவபடி 1000 வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்.

குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1,50,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் துரைசாமி, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் செளந்திரபாண்டியன் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தாராபுரம்:  தாலுகா அலுவலகம் முன் நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் பீர்ஜாபர் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மணிவேல் முன்னிலை வகித்தார்.

Related Stories: