திமுக சார்பில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர், நவ.14: திருப்பூரில் திமுக இளைஞரணி சார்பில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டி வரும் 18ம் தேதி காலை 8.30 மணிக்கு தாராபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. பேச்சுப் போட்டியில் “மொழிப்போர் களத்தில் அய்யாவும், அண்ணாவும், கலைஞரும், பெரியார்-அண்ணா-கலைஞர்-ஸ்டாலின் ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேச வேண்டும்.

‘திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும், காலத்தால் அழியாத கலைஞர் அரசின் சாதனைகள் ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 100 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கவிதை ஒப்பித்தல் போட்டியானது ‘புறநானூற்றில்-1’ எனும் தலைப்பில் 1945-ம் ஆண்டு கலைஞர் எழுதிய குடிசை தான் ஒரு புறத்தில்’ என தொடங்கி ‘வாளிங்கே அவன் நாக்கெங்கே’ என முடியும் கவிதை, ‘புறநானூற்றில்-3’ எனும் தலைபில் 1964ம் ஆண்டு கலைஞர் எழுதிய ‘பனிமூட்டை அடைகாக்கும் எனத் தொடங்கி, அகமிகநொந்தாள் ஒளவைப்பிராட்டி என முடியும் கவிதை ஆகிய இரண்டு கவிதைகளில் ஏதேனும் ஒரு கவிதையை ஒப்புவித்தல் வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2வது பரிசாக ரூ. 5ஆயிரமும், 3வது பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500ம் வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியர் தங்களது கல்வி நிலையத்தின் சான்றுகளோடு, அந்தந்த மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், இளைஞர் அணி அமைப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: