மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கும்மிடிப்பூண்டி, நவ. 14: சென்னை ரோட்டரி சங்கம் மற்றும் பிரீடம் அறக்கட்டளை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. ரோட்டரி சங்க கவர்னர் பாபு பிரேம் தலைமை வகித்தார்.சங்க தலைவர் சண்முகம், பிரீடம் அறக்கட்டளை தலைவர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எம்.கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், அபிராமி மால் உரிமையாளர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று 101 பயனாளிகளுக்கு, ₹7 லட்சம் மதிப்பில், மூன்று சக்கர சைக்கிள், வீல் சேர், செயற்கை கால்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர். விழா ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தினர், மகாராஜா அக்ரசன் பள்ளி தாளாளர் சுப்பையா, பிரீடம் அறக்கட்டளை நிர்வாகிகள், சங்கமம் அறக்கட்டளை தலைவர் ரஹமத்துல்லா, செயலாளர் சுதாகர், பொருளாளர் லலிதா உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

Related Stories: