அரசு பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி

திருவள்ளூர், நவ. 14: கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் நடுநிலைப்பள்ளியில், உலக கழிவறை தின நிகழ்ச்சி  நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாவட்டமாக பிரகடனம் செய்யப்பட்டு, ஊராட்சியில் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக கழிவறை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது.மேல்நல்லாத்தூர் நடுநிலை பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு, ‘’கை கழுவும் பழக்கம், மகளிர் சுகாதார வளாகம், ஆண்கள் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் சாண எரிவாயு கலன் அமைத்தல் குறித்து  மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அருள், பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: