2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு காரணமான அடையாறு தரைப்பாலத்தை இடிக்கும் பணி ெதாடக்கம்

சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஈக்காட்டுதாங்கல் பகுதி வெள்ளத்தில் மூழ்க  காசி திரையரங்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான தரைப்பாலம்தான்  காரணம் என்று சிஏஜி அறிக்கை அளித்தது. இதனைத் ெதாடர்ந்து இந்த பாலத்தை இடிக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத் துறைக்கு அறிக்கை அளித்தது. இந்நிலையில், இந்தப் பாலத்தை இடிக்கும் பணியை  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். இந்த பணியை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் இந்தப் பாலத்தை இடிக்கும் பணி 15 நாட்களில் முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: