21 லட்சம் தங்கம் ஐபோன் பறிமுதல்

சென்னை: கொழும்பில் இருந்து லங்கன் ஏர் லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த இலங்கையை சேர்ந்த பாத்திமா சனோஷா (23) என்ற இளம்பெண்ணை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவருடைய உள் ஆடைக்குள் 200 கிராம் எடை கொண்ட 2 புதிய தங்க செயின்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.6.5 லட்சம். இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது நிசாம் (46) என்பவரிடம் இருந்து ஐபோன்கள் 6, விலையுயர்ந்த கை கடிகாரங்கள் 10, கேமரா மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் அதோடு 40 கிராம் எடை உடைய தங்க கட்டி ஒன்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: