கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விக்கிரவாண்டி, நவ. 14: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது புயலாக மாறி விழுப்புரம், கடலூர், புதுவை உள்பட 9 மாவட்டங்களுக்கு புயல் அபாயம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் புயலின் இடர்பாடுகளை விரைந்து போக்கும் வகையில் ஊரக வளர்ச்சி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, நாராயணன் ஆகியோர் தலைமையில் முன்னெச்சரிக்கையாக ஆயிரத்து 500 மணல் மூட்டைகள், 2 டன் மர கம்பங்கள், 10 மரம் அறுக்கும் இயந்திரம், 18 ஜெனரேட்டர்கள், பிளீச்சிங் பவுடர்கள் என தயார் செய்யும் பணி நடக்கிறது. இதனை மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி இயக்குநர் சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: