கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், நவ. 14:  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், இணையதளத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அந்தந்த வட்ட தலைநகரங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இணை செயலாளர் உமாபதி, துணைத்தலைவர் சுமதி, மகளிர் அணி செயலாளர் மீனாட்சி, குறுவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செந்தமிழ்செல்வன், ராஜூ, பாரதி

தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: