விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

விழுப்புரம், நவ. 14: கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் புயல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறை, வருவாய்துறை, தீயணைப்பு துறை மற்றும் இதர துறையினருடன் இணைந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் 2 கூடுதல் எஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் புயல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய இடங்களில் நீச்சலில் நன்கு பயிற்சி பெற்ற காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் கடலோர காவல்

படையினர் உள்ளடக்கிய மீட்பு படையினர் வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் கால பயிற்சி பெற்ற காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள முக்கிய இடங்களில் தன்னார்வ தொண்டர்கள், தேசிய மாணவர் படை, என்எஸ்எஸ் மாணவர்கள், மீனவர்கள், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. புயல் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள கடலோர கிராமங்களில் ஒலி பெருக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் உள்ள போலீசார் அனைவரும் இந்த வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

எனவே, அனைவரும் புயல் மழை சம்பந்தமாக எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் இருக்கவும், அவசர உதவிக்கு காவல்துறை அதிகாரிகள் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கோட்டக்குப்பம் உட்கோட்டம் டிஎஸ்பி இளங்கோவன் 9443781474, மரக்காணம் காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் 9498154445, ஆரோவில் காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் ஜோசப்செல்வராஜ் 9498108845, கோட்டக்குப்பம் காவல் நிலையம் திருமேனி 9498153308, வானூர் காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் எழிலரசி 9498153499, விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி 9498105782, மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் 04146-222172, 9498100485, வெள்ள கட்டுப்பாட்டு அறை 1077, 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Related Stories: