குமரியில் வேகமாக பரவும் கோமாரி நோய்

நாகர்கோவில், நவ.14: குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பரவுவது கால்நடை வளர்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுக்க கோமாரி தடுப்பூசி போடும் பணி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்தது. இந்த நிலையில் தற்போது பல்ேவறு பகுதிகளில் கோமாரி நோய் கால்நடைகளை தாக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட மாடுகளுக்கும் இந்நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. கால் மற்றும் வாய்களில் புண், அதனால் கால்நடைகள் தண்ணீர் குடிக்காமல் நிற்கின்ற நிலை உள்ளது. இந்த கால்நடைகளை பராமரிக்க தினசரி 300 வரை செலவிட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பாபு ஆன்டனி நாகர்கோவில் கால்நடைத்துறை தலைமை மருத்துவர், குமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து நேற்று மனு அளித்தார். அந்த மனுவில், பார்வதிபுரம், பெருவிளை கால்நடை மருத்துவமனை எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 4 பசு மாடுகள், 2 கன்றுகுட்டிகள் வளர்த்து வருகிறேன். கோமாரி நோய் தடுப்பூசி முறையாக போட்டு வருகிறேன்.

இந்த முறையும் அரசு மருத்துவர் இந்த மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினார். ஊசி போட்ட பிறகும் மாடுகளுக்கு ேகாமாரி நோய் வந்துள்ளது. இதனால் அரசு போட்ட தடுப்பு மருந்து காலாவதியானதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகும் கோமாரி நோய் தாக்கியதால் அந்த கால்நடைகளை பராமரிக்க போதிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலையில் கால்நடை துறை அதிகாரிகள் பார்வதிபுரம் பகுதியில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்போரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories: