பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நாகர்கோவில், நவ. 14:  குமரி மாவட்டத்தில் பன்றிகாய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுகாதாரத்துறை, வடசேரி காவல்துறை, நாகர்கோவில் நகராட்சி, நோய்தடுப்பு மருந்துதுறை ஆகியவை இணைந்து நடத்திய பன்றிகாய்ச்சல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலைக்குழு தலைவர் பழனியாபிள்ளை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதுசூதனன் கலந்துகொண்டு விழிப்புணர்வு துண்டுபிரசுரம், விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் இந்து கல்லூரி பேராசிரியர் பகவதிபெருமாள், சுகாதாரத்துறை கல்வி அலுவலர் சூரியநாராயணன், வடசேரி இன்ஸ்பெக்டர் சேவியர், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: