கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கனூர், நவ. 13: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 19 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பங்குதாரர்களாகவும், 400 தொழிலாளர்கள் பணிபுரிந்தும் வருகின்றனர். இந்த சர்க்கரை ஆலை நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி (நேற்று முன்தினம்) வரை லே-ஆப் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை லே-ஆப் முடிந்து தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அப்போது தகவல் பலகையில் காலவரையற்ற லே-ஆப் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் லே-ஆப் கொடுத்த காலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்கவில்லை. முன்னறிவிப்பின்றி காலவரையற்ற லே-ஆப் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் இந்த ஆண்டு பணிகள் துவங்கப்படும் என தெரிவித்தும் அதற்கான அறிகுறிகள் இல்லாததை கண்டித்தும் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: