ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க பேவர்பிளாக் அமைக்கப்படுமா?

தொண்டி,நவ.12:  தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகம் முழுவதும் மணல் பரப்பாக உள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்ய வளாகம் முழுவதும் பேவர் பிளாக் அமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் விபத்துகள் மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்க இங்குதான் கொண்டு வரப்படுகிறது.

மேலும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்திய பிறகு இங்கு பிரசவமும் பார்க்கப்படுகிறது. நோயாளிகள் அதிகம் வரும் இங்கு வளாகம் முழுவதும் மணல் பரப்புகளாக உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது நோயாளிகளுககு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த வளாகம் முழுவதும் பேவர் பிளாக்க அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறியது, இரவு பகல் என அனைத்து வேளைகளிலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் வருகின்றனர். வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோயாளிகள்  சிரமப்படுகின்றனர். ஆம்புலன்சில் நோயாளிகளை ஏற்ற இறக்க மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் தற்போது சாலைகள் மற்றும் தெருவில் பதிக்கப்படும் பேவர் பிளாக்கை இங்கு பதித்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

Related Stories: