விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், நவ.12:  மண்டபம் ஓன்றியம் வெள்ளரி ஓடை கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்,    மேற்கு ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட மருத்துவ அணி சார்பில் டெங்கு, பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆசிக்அமின், இளைஞர் அணி அமைப்பாளர் இன்பாரகு முன்னிலை வகித்தனர்.

முகாமில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. சிகிக்சைக்கு தேவையான ஆலோசனைகளும்  வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி  அமைப்பாளர்  பாலமுருகன் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: