முடிவடையாத பாதாள சாக்கடை பணி எழுமலை, சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பன்றிக் காய்ச்சல், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

உசிலம்பட்டி, நவ. 12: எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் நோய்த்தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகளில் உள்ள கைப்பிடிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுத்தலங்களில் நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், மருத்துவர் ஆலோசனைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகள், வெளியில் வாங்கி பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவின்படி, எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு தலைமையில் நடைபெற்றது. இதில் இளநிலை பொறியாளர் மீனாகுமாரி, பேரூராட்சி பணியாளர்கள் மதிவாணன், பரமசிவம், செல்லப்பாண்டி, நாகராஜன், மும்மூர்த்தி, முத்துராஜ், உட்பட துப்பரவு பணியாளர்கள் கலந்துகொண்டு பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சோழவந்தான்:  இதேபோல், சோழவந்தான் பேரூராட்சி மற்றும் மேலக்கால், கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து பேரூராட்சி பகுதியில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் பஸ்நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், காய்கறி சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து, பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் டாக்டர் தீபா முன்னிலையில் உள்  நோயாளிகளின் படுக்கைகள் உள்ளிட்ட பல  இடங்களில் ‘லைசால்’ எனும் கிரிமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்யப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள்   முத்துக்குமார், சிவக்குமார், வாசிமலை, கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: