வைகை ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

மதுரை, நவ.12:  மதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன. அப்போது பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை நகர் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று ஏவி பாலம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது இங்குள்ள வழிபாட்டு தலத்தை மாநகராட்சியினர் இடிக்க முயன்றதால், இப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை  முடிவில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு திங்கட்கிழமை வரை அவகாசம் தந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.

Related Stories: