கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகள் பயன் பெறலாம்

திருமங்கலம், நவ.12:  மதுரை மாவட்டம் முழுவதும் 50 சதவீதம் மானியத்தில் கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் கால்நடைத்துறை உதவிஇயக்குனர் திருவள்ளுவர் கூறுகையில், கறவை மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் வசதிக்காக இன்சூரன்ஸ் திட்டம் உள்ளது. இதில் இரண்டு வயது முதல் எட்டு வயது வரையிலுள்ள கால்நடைகளுக்கு ரூ.600 செலுத்தி இன்சூரன்ஸ் பெறலாம். இதில் 300 ரூபாயை அரசு வழங்குகிறது. இதனால் மீதமுள்ள 300 ரூபாயை விவசாயிகள் தங்களது பங்காக இன்சூரன்ஸ் தொகைக்கு செலுத்தலாம். ஒரு விவசாயி ஐந்து மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். விபத்து, இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் மாடுகள் உயிரிழந்தால் ஒரு மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வரையில் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இதனால் விவசாயிகள் பலனடைவர். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய விவசாயிகள் அருகே உள்ள கால்நடை மருத்துவர்களை அணுகலாம் என்றார்.

Related Stories: