டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 28 சதவீதம் பேர் ‘ஆப்சென்ட்’

திண்டுக்கல், நவ. 12: நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் மாவட்டத்தில் 27.51 சதவீதம் பேர் அதாவது  4774பேர் தேர்விற்கு வரவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதன்மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், துணைப்பதிவாளர், நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல்அலுவலர் உள்ளிட்ட 1199 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

மாவட்டத்தின் 66 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. 17 ஆயிரத்து 353 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 12 ஆயிரத்து 579 பேர் மட்டுமே தேர்வு எழுத வைத்தனர். 27.51 சதவீதம் பேர் தேர்விற்கு வரவில்லை. விடைத்தாள்கள் பாதுகாப்பாக தேர்வு மையங்களில் இருந்து பெறப்பட்ட வட்டாட்சியர் தலைமையில் கருவூலகங்களுக்கு கொண்டு வரப்பட்டன. ஆயுதம் தாங்கிய காவலர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

கலெக்டர் வினய் திண்டுக்கல் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை பார்வையிட்டார். உடன் மேற்கு தாசில்தார் லட்சுமி உட்பட பலர் இருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விடைத்தாள்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டன. எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். ஒவ்வொரு தேர்விலுமே ஆப்சென்ட் விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்தேர்வில் விண்ணப்பித்ததில் கால்வாசிக்கும் மேல் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

Related Stories: