திருத்துறைப்பூண்டி நகரில்எரிவாயு தகன மேடை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, நவ.8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கையை யடுத்து திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் எரிவாயு தகனம் அமைப்பதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு 110 விதியின் கீழ் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன் பிறகு டெண்டர் விடப்பட்டது. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு இடம் கிடைக்காததால் காலதாமதம் ஆனது. அதன்பிறகு எரிவாயு தகனம் அமைப்பதற்கு நாகை பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான பொது மயானம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு ஆயத்தபணிகள் நடைபெற்று வந்தது.ஏதோ காரணத்தால் இங்கு எரிவாயு தகனம் அமைக்க வேண்டாம். வேறு இடத்தை தேர்வு செய்து பணிகள் தொடர வேண்டும் என வருவாய் துறை தெரிவித்தது. இதனையடுத்து வேதாரண்யம் பைபாஸ் சாலை அருகே நகராட்சி பழைய உரக்கிடங்கு அருகே எரிவாயு தகனம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. எரிவாயு தகனம் பணி தொடங்கப்படாததால் இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப ஒப்படைக்கும் நிலைஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது மேலும் நகராட்சியில் பொறியாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளது. இதனால் திட்டப்பணிகளுக்கு காசோலை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஆவதால் திட்டப்பணிகள் அனைத்தும் செயல்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கின்றன. எனவே காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். மேலும் எரிவாயு தகனம் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: