வீடுகளில் புகுந்த பாம்புகள் மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை, நவ.8: மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் தீபாவளிப்பண்டிகையின்போது ஆங்காங்கே பட்டாசுகளும் அணுகுண்டு வெடிகளையும் வெடித்து  மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.அன்றையதினம் மாலையில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது புளியந்தெரு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டு நாய் மிரண்டு ஊளையிட்டு கொண்டே தலைதெறிக்க ஓடியது. இதைக்கண்ட விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் அதை தேடிச்சென்றும் கிடைக்கவில்லை. 1 மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு கொல்லைபுறத்தில் உள்ள கிணற்றிலிருந்து அந்த நாயின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அங்கே சென்று பார்த்தபோது 25 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 அடி வரை நீர் இருந்தது. அந்த கிணற்றில் இறக்கியுள்ள  பிளாஸ்டிக் பைப்பை வாயால் கவ்விக்கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் அங்கே சென்று அந்த நாயை உயிருடன் மீட்டனர்.  மேலும் இதுபோன்று வெடி வெடித்ததால் ஏற்பட்ட பூமியின் அதிர்வால் பல்வேறு இடங்களில் இருந்த நல்ல பாம்புகள் தங்களது இடத்தைவிட்டு வெளியேறின. ரயிலடி எடத்தெரு பகுதியில் உள்ள ராஜகுமார் என்பவரது வீட்டின் சமையலறைக்குள் இரவு 11.30 மணிக்கு ஒரு நல்லபாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தீயணைப்புத்துறையினர் சென்று 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்துச்சென்றனர். மயிலாடுதுறை சீனிவாசபுரம் மாதவன் என்பவரது வீட்டில் பகல் நேரத்தில் நல்ல பாம்பு புகுந்ததைக் கண்ட அக்குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சென்று 7 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்துச் சென்றனர். அதே போன்று மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி கிராமத்தில் உள்ள அக்ரஹாரத்தெரு வினோதகன் மனைவி சுன்யா என்பவரது வீட்டில் மாலை நேரத்தில் நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர்  உடனடியாக சென்று 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாகப் பிடித்துச்சென்றனர். பிடிக்கப்பட்ட பாம்புகள் மயிலாடுறை அ ருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்றுவிடப்பட்டது.

Related Stories: