நாகை அருகே சிக்கல் நந்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

நாகை, நவ.8: நாகை அருகே சிக்கல் நவநந்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.நாகை மாவட்டம்,  சிக்கல் நவநீதிஸ்வரர் கோயிலில் உள்ளது. இந்த கோயில் கி.பி. 4ம் நூற்றாண்டில் கோச்செங்க சோழனால் கட்டப்பட்ட மாட கோயிலாகும். இந்த கோயில் சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருசெந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இந்த கோயில் வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவரின் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக்காட்சி நடைபெறுவதை ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு களிப்பர்.

 இந்த கோயில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை கணபதி ஹோமம்த்துடன் தொடங்கியது. மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையும் நடைபெற்றது. இன்று இரவு 1ம் நாள் திருவிழாவாக    காப்பு கட்டுதலும்,  இரவு சிங்காரவேலவர் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் பல்வேறு வாகனத்தில்  சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது.  முக்கிய திருவிழாவாக 12ம் தேதி  காலை திருத்தேர்விழாவும், மாலை சக்திவேல் வாங்குதல் மற்றும் சிங்காரவேலவர் முகத்தில் இருந்து வியர்வை சிந்தும் அற்புத காட்சியும் நடைபெறுகிறது. 14ம் தேதி தெய்வசேனை திருக்கல்யாணமும், 15ம் தேதி வள்ளி திருக்கல்யாணமும், 16ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள். விழா குழுவினர், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: