கண்டுகொள்ளாத அதிகாரிகள் கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

திருப்புவனம், நவ.8: திருப்புவனம் அருகே ஏனாதியை சேர்ந்தவர் பொன்னம்பலம்(48). கட்டட தொழிலாளி. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் தீபாவளியன்று திருப்புவனம் பழையூரில் உள்ள விவசாய பம்ப் செட் கிணற்றில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவரின் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து மானாமதுரை தீயணைப்பு நிலைய மீட்புக் குழுவினர் உடலைமீட்டு விசாரித்த போது ஏனாதியை சேர்ந்த பொன்னம்பலம் என்பது தெரியவந்தது. நேற்று முந்தினம் வயல் வெளியில் திரிந்ததாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். கிணற்றுக்கு அருகே படுத்திருந்த பொன்னம்பலம் தவறி உள்ளே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையம், நவ.8: ராஜபாளையத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார மருந்து வணிகர் சங்கம் சார்பில் சொக்கர்கோயிலில் துவங்கிய பேரணியை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் சிவகாசி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ராம்கணேஷ் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறை செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினர். பேரணி பழைய பஸ்நிலையத்தில் முடிந்தது.

Related Stories: