விவசாயிகள் கவலை சேதமடைந்து காணப்படுகிறது கிராமமக்கள் போராட்டத்தால் பரபரப்பு பொருட்கள் எரிந்து நாசம் தீபாவளியன்று அடுத்தடுத்து தீ விபத்து

விருதுநகர், நவ.8: தீபாவளி அன்று காலை 11 மணி அளவில் விருதுநகர் வாடியான் தெருவில் பழைய பேப்பர் கடை அருகில் வெடிக்கப்பட்ட பட்டாசு சிதறி கடையில் பட்டு தீ  பிடித்து எரிந்தது. இதில் அந்த கடையில் இருந்த பழைய அட்டை, பழைய பேப்பர் மற்றும் துணிகள் எரிந்து நாசமாகின.காலை 12 மணி அளவில் மேல ரதவிதியில் உள்ள குப்பை தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

மதியம் 3 மணியளவில் யானைகுழாய் தெருவில் பிளாஸ்டிக் குடானில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தீயில் உருகி சேதமடைந்தது

இரவு ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசு அந்த உணவகத்தின் மேற்கூரை மீது விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 20 நிமிடம் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தினால்  உணவகத்தின் மேற்கூரை சமையல் அறை பாத்திரங்கள், உணவகம் பின்புறம் உள்ள சலூன் கடை பொருள்கள் என சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தது. விபத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. விபத்து குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம், சாத்தூர் ஆகிய இடங்களில் மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது.

Related Stories: