சேத்தூரில் மிரட்டும் சுகாதார நிலைய மேற்கூரை

ராஜபாளையம், நவ.8: சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை சேதமடைந்துள்ளதால் நோயாளிகள், நர்சுகள் பீதியடைந்துள்ளனர். உடனே சரி செய்ய வேண்டும் என கோரிக்கை

விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 300க்கும் மேற்பட்ட நோயளாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பரிசோதனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் அனைத்து பொருட்களும் வீணாக கிடக்கின்றன. குறிப்பாக எம்எல்ஏ நிதியிலிருந்து வாங்கி கொடுத்த செல்கவுண்டர் மிஷின், ஆட்டோ அனலைசர் கருவி உட்பட பரிசோதனை கருவிகள் பலவற்றை பூட்டியே வைத்துள்ளனர். அதேபோல் நோயாளிகள் வந்து செல்லும் அறையிலும் மேற்கூரை இடிந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்எல்ஏ தங்கப்பாண்டியனிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ.விடம், ‘‘மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை கருவிகளை இயக்குவதற்கு உரிய லேப்டெக்னீசியன்கள் இல்லாததால் பரிசோதனை செய்ய முடியாமல் இருக்கிறது’’ என அதிகாரிகள் கூறினர்.

அதனை தொடர்ந்து மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைத்து பரிசோதனை கருவிகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

Related Stories: