பொதுமக்கள் கோரிக்கை கட்டி 24 ஆண்டுகளாகியதால் பழுதடைந்த அரசுப்பள்ளி கட்டிடம் இடிப்பு

சின்னமனூர், நவ. 8:  சின்னமனூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் உள்ள துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டிமுடித்து 24 ஆண்டுகளிலேயே பழுதடைந்ததால் அதனை இடிக்கும் பணி நடைபெற்

றது.

சின்னமனூர் அருகே சங்கராபுரம் கிராம பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டுள்ள வெம்பக்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்குள்ள ஏழை எளியோர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக கடந்த 1994ம் ஆண்டு சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 1 முதல் 5ம் வகுப்புவரையில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட திறக்கப்பட்டு இயங்கி வந்தது. இது 24 ஆண்டுகளிலேயே பழுதடைந்துவிட்டது என மறுபடியும் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதற்காக விரைவிலேயே பழுதாகிவிட்ட பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. முழுவதும் தகர்க்கப்பட்டவுடன் மீண்டும் புதிதாக பில்லர் குழிகள் தோண்டப்பட்டு பில்லர்கள் அமைத்து புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு வருவ

தால்  

தற்போது அருகிலுள்ள சமுதாய கூடத்தில் பள்ளி கூடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 15 மாணவ, மாணவியர் படித்துவரும் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்.

தரமில்லாமல் கட்டியும், பராமரிப்பின்றியும் கிடக்கும் அரசு கட்டிடங்களால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

Related Stories: