கடமலைக்குண்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் மீண்டும் நடக்குமா?

வருசநாடு, நவ.8: கடமலைக்குண்டு கிராமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 150க்கும் மேற்பட்ட மலைக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமாக சர்வே பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இப்பணியை மீண்டும் துவக்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் சாலைகளின் இருபுறமும் சாக்கடை வடிகால் அமைத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மணி கூறுகையில், ``ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பு நெருக்கடியால் பொதுமக்கள் சாலைகளில் செல்வது சிரமம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அளவீடு பணி நடைபெறுகிறது. ஆனால், முறையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை செய்வதில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரியிடம் கேட்டதற்கு, `` வருவாய்த்துறை அளவுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அளவுகளை வைத்து முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும்’’ என்றார்

Related Stories: