குற்றங்களை தடுக்க சைரன் ெபாருத்திய டூவீலர் போடி டிவிஷனில் அறிமுகம்

போடி, நவ. 8: குற்றங்களைத் தடுக்கும் வகையில் சப்தம் எழுப்பும் சைரன் கருவி பொருத்திய டூவீலர்களை தேனி மாவட்டத்தில் போடி டிவிஷனில் எஸ்.பி பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றைத் தடுக்க ரோந்து செல்லும் காவல்துறை எஸ்.ஐக்கள், சிறப்பு எஸ்.ஐக்கள் மற்றும் தலைமை காவலர்கள் போலீசாரின் டூவீலர்களில் சைரன் கருவி பொருத்தி சப்தம் எழுப்பி ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேனி மாவட்டத்தில் போடி டிஎஸ்பி கட்டுப்பாட்டிலுள்ள போடி நகர், போடி புறநகர், போடி அனைத்து மகளிர், போடி குரங்கணி, தேவாரம், கோம்பை, சின்னமனூர், ஹைவேவிஸ் ஆகிய காவல் நிலையங்களுக்கு சைரன் கருவி டூவீலர்களில் பொருத்தப்பட்டது.

போடியில் உள்ள ஜகாநி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த வாகனங்களை தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போடி டிஎஸ்பி ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போடி ஆய்வாளர் சேகர்,போடி புறநகர் ஆய்வாளர் வெங்கிடாஜலபதி, தேவாரம் ஆய்வாளர் ஆனந்த், சின்னமனூர் ஆய்வாளர் இமானுவேல்ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது எஸ்.பி பாஸ்கரன் கூறுகையில், `` குற்றங்களைத் தடுக்கவும், தீபாவளியின் போது பிரச்னைகள் ஏற்படாத வகையில் ரோந்து செல்ல சைரன் கருவி பொருத்திய டூவீலர்கள் தேனி மாவட்டத்தில் முதன்முதலாக போடி சரகத்தில் துவக்கப்பட்டுள்ளது. பல வகையான குற்றங்களைத் தடுக்க ரோந்து பணி அதிகரித்துள்ளது’’ என்று அவர் ெதரிவித்தார்.

Related Stories: