அறநிலையத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா? வயல் பகுதிகளில் வைகை அணை நீர்

தேனி, நவ. 8: தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதில் வைகை அணையில் 69 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும், வருசநாடு மூலவைகை ஆற்று பகுதிகளில் இருந்தும் வெள்ள நீர் வருகை அதிகம் உள்ளதால் வைகை அணையில் தொடர்ந்து  69 அடி நீர்மட்டம் இருந்து வருகிறது.  

வைகை அணையில் நீர் நிரம்பும்போது, அணையில் தேங்கும் நீரானது தேனியை அடுத்துள்ள குன்னூர், அரப்படித்தேவன்பட்டி வரை சூழ்ந்துவிடும் நிலை உள்ளது. இதில் தேனியில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் போது, குன்னூரில் இருந்து அரப்படித்தேவன்பட்டி வரை வைகை அணையில் தேங்கியுள்ள நீரானது இச்சாலையை ஒட்டியுள்ள வயல்பகுதிகளுக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனை இச்சாலையில் வாகனங்களில் பயணிப்போர் உற்சாகமாக பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Related Stories: