தொழிலாளர் நலத்துறை சார்பில் 1.81 லட்சம் பேருக்கு ரூ.47.99 கோடி நிதி உதவி

தேனி,  நவ. 8: தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 81  ஆயிரம் தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.47 கோடியே 99 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட கலெக்டர்  பல்லவிபல்தேவ் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நலவாரியத்தில்  பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு  வருகிறது. இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 ஆண்டுகளில்  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகையாக 1 லட்சத்து 72  ஆயிரத்து 207 தொழிலாளர் குழந்தைகளுக்கு ரூ.33 கோடியே 50 லட்சத்து 82  ஆயிரத்து 366ம், திருமண உதவித் தொகையாக 1914 பேருக்கு ரூ.67 லட்சத்து 1  ஆயிரத்து 516 ம், மகப்பேறு உதவித் தொகையாக 614 பேருக்கு ரூ.32 லட்சத்து 90  ஆயிரத்து 300ம்,  கண்கண்ணாடி வாங்க உதவித்தொகையாக 1638 பேருக்கு ரூ.8  லட்சத்து 17 ஆயிரத்து 820ம் வழங்கப்பட்டுள்ளது.

        இயற்கை மரணம்  எய்திய தொழிலாளர்களின் ஈமச்சடங்கிற்காக 1496 பேருக்கு ரூ.2 கோடியே 55  லட்சத்து 26 ஆயிரமும், விபத்து மரணம் உதவித் தொகையாக 132 பேருக்கு  ரூ.1 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரமும், புதிய ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின்  கீழ் 2 ஆயிரத்து 442 பேருக்கு ரூ.6 கோடியே 87 லட்சத்து 83 ஆயிரத்து 229ம்,  பணியின்போது மரணம் ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு பதிவு பெற்ற உதவித் தொகையாக 2 பேருக்கு ரூ.10 லட்சமும், பதிவு பெறாத பணியின்போது மரணம் ஏற்பட்ட  4 பேரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், ஓய்வூதியம் வழங்கும்  திட்டத்தின் கீழ் 1 ஆயிரத்து 52 பேருக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 30  ஆயிரத்து 63 என மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 501 பேருக்கு 47 கோடியே 98  லட்சத்து 79 ஆயிரத்து 294 மதிப்பிலான உதவித் தொகை தொழிலாளர் நலத்துறையின்  கீழ் வழங்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்தார்.

Related Stories: