கரூர் மாவட்டத்தில் 10ம்தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர், நவ.8: கரூர் மாவட்டத்தில் வரும் 10ம்தேதி ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலை அங்காடிகள் சம்பந்தமான குறைபாடுகள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் தொடர்பான பொதுமக்களின் குறைகளை களைவதற்கு நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் கூட்டம் நவம்பர் 10ம்தேதி நடைபெறுகிறது.அதன்படி, கரூர் தாலுகாவில், கே.பிச்சம்பட்டி விஏஓ அலுவலகத்திலும், அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், குளித்தலை தாலுகா, பொய்யாமணி விஏஓ அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ரெங்கநாதபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும், கடவூர் தாலுகா, மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், மண்மங்கலம் தாலுகா கோயம்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்திலும் காலை 10 முதல் 1மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது.எனவே, இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். தற்போது, பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதால், இதுவரை மின்னணு குடும்ப அட்டைகளை பெறாத அட்டைதாரர்கள் இந்த கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: