தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் ஊர்பெயர்கள் அமைய அரசாணை வெளியீடு

ஈரோடு, நவ. 8:  ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் இதுகுறித்து கூறியுள்ளதாவது: 2018-19ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் உள்ள ஊர்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எண்ணற்ற ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமைந்திட உயர்நிலைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 இதில் உயர்நிலைக்குழு தலைவராக கலெக்டரும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரும், உறுப்பினர்களாக மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை உதவி இயக்குனர், மாவட்ட பதிவாளர் பதிவுத்துறை, மாநகராட்சி ஆணையாளர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், உள்ளூர் தமிழறிஞர்கள் ஆகியோர் செயல்படுவார்கள்.  இந்த திட்டத்திற்கு இணங்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையுள்ள கிராமங்களின் பெயர்களை ஆவணங்களின் அடிப்படையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி நிலையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய பெயர்களை குறிப்பிட்டு உரியாவாறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாவட்டம், வட்டம், ஊர்பெயர் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளில் எழுதி, வரும் 9ம் தேதிக்குள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories: