ஈரோட்டில் ரூ.2.50 கோடி செலவில் புதிய தீயணைப்பு நிலையம்

ஈரோடு, நவ. 8:  ஈரோட்டில் தற்போது உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் ரூ.2.50 கோடி செலவில் புதியதாக தீயணைப்பு நிலையம், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட 10 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சராசரியாக 20 கி.மீ., தொலைவிற்கு ஒரு தீயணைப்பு நிலையம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 14 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன.

இந்நிலையில் ஈரோடு தீயணைப்பு நிலைய கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடமாக உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் புதிய தீயணைப்பு நிலையம், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகம், நிர்வாக கட்டிடம், தண்ணீர் தொட்டி, குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதில் முதல் கட்டமாக தீயணைப்பு நிலையம், தீயணைப்பு அலுவலகம், நிர்வாக அலுவலகம் கட்ட ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல புஞ்சை புளியம்பட்டிக்கு ஒரு தீயணைப்பு நிலையம் கேட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருவதால், சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடப்பதாக அதிகாரிகள் கூறினா்.

Related Stories: