சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சத்தியமங்கலம், நவ. 8:  கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று அமாவாசை என்பதால், காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர்.  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட பக்தர்கள் கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும், வேலுக்கு எலுமிச்சை கனி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இந்நிலையில் கோயில் வளாகத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Related Stories: