தீபாவளி பண்டிகையையொட்டி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை மந்தம்

ஈரோடு, நவ. 8:  தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 உழவர்சந்தைகளில் காய்கறி விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால் 53 மெட்ரிக் டன் காய்கறிகள் மட்டும் விற்பனையானது.

 தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் காய்கறி விற்பனை மந்தமாக இருந்தது. பெரும்பாலோனார் அசைவத்திற்கு மாறியதால் விற்பனை குறைந்தது. நேற்று முன்தினம் ஈரோடு சம்பத் நகர் உழவர்சந்தையில் 88 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 21 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 985க்கு விற்பனையானது. இதில் 4 ஆயிரத்து 879 நுகர்வோர்கள் பயனடைந்தனர். ஈரோடு பெரியார் நகர் உழவர்சந்தையில் 27 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 9 டன் காய்கறிகள் ரூ.ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 240க்கு விற்பனையானது.

இதில் 2 ஆயிரத்து 646 நுகர்வோர்கள் பயன் பெற்றனர். பெருந்துறை உழவர்சந்தையில் 10 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 3 டன் காய்கறிகள் ரூ.77 ஆயிரத்து 985க்கு விற்பனையானது. இதில் 643 நுகர்வோர்கள் பயனடைந்தனர்.

  கோபி உழவர்சந்தையில் 41 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 9 மெட்ரிக்டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 486க்கு விற்பனையானது. இதில் ஆயிரத்து 577 நுகர்வோர்கள் பயன் பெற்றனர். சத்தியமங்கலம் உழவர்சந்தையில் 55 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 9 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 230க்கு விற்பனையானது.

இதில் ஆயிரத்து 673 நுகர்வோர்கள் பயன் பெற்றனர். நேற்று முன்தினம தீபாவளி பண்டிகையையொட்டி 53 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.13 லட்சத்து 72 ஆயிரத்து 926க்கு விற்பனையானது.

ஆனால் அதற்கு முன்பு 4ம் தேதி 70 மெட்ரிக் டன்னும், 5ம் தேதி 65 மெட்ரிக் டன்னும் விற்பனையானது குறிப்பிடதக்கது. தீபாவளி பண்டிகையான நேற்று சிக்கன், மட்டன் விற்பனை அதிகரித்தது. இதனால் காய்கறிகள் விற்பனை மந்தமாகவே இருந்தது.

Related Stories: