தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி,  நவ.8: தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாய மின் இணைப்பு கேட்டு  காத்திருப்போர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆலோசகர்  நசீர்அகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ராஜா, ராஜேந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வேலு வரவேற்றார். கூட்டத்தில்,  தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் பங்கேற்று பேசினார்.  மாவட்டத்தில்  56 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு 20 ஆண்டுகளாக  காத்திருக்கின்றனர். இதில் 33,500 பேர் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து  சீனியாரிட்டியில் உள்ளனர்.

சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் கேட்டால்  கம்பம் இல்லை என்கின்றனர். எனவே, மாவட்டத்திற்கு 10 ஆயிரம்  மின்கம்பங்களும், 2 ஆயிரம் மின் மாற்றிகளும் வழங்க வேண்டும். இதை  மின்வாரியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. விவசாயத்திற்கு முன்னுரிமை  அளிப்பதாக கூறிவரும் தமிழக அரசு, மின் இணைப்பு வழங்க மறுப்பது  வேதனையளிக்கிறது. மின்வாரியம் உடனடியாக இதற்கான நடவடிக்கையை  எடுக்காவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது.

Related Stories: