பாலதோட்டனப்பள்ளியில் ₹6.50 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணி

தேன்கனிக்கோட்டை, நவ.8:  பாலதோட்டனப்பள்ளியில், ₹6.50 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணியை தளி பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை முதல் பாலதோட்டனப்பள்ளி வரை சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து சாலையை மேம்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தொடரில் முறையீடு செய்தார். இதனை ஏற்று சாலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ₹6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், துணை செயலாளர் முனிராஜ், பொருளாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, ஒன்றிய இளைஞரணி பைரவமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், ராஜா, லோகேஷ், அன்சர்பாய், முனிசாமி ஆச்சாரி, நாராயணசாமி ஆச்சாரி, கிருஷ்ணாச்சாரி உட்பட கட்சி நிர்வாகிகள் கெல்லபள்ளி, பாலதோட்டனப்பள்ளி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: