ெபன்னாகரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம்

பென்னாகரம், நவ.8: பென்னாகரம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என பெண்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களாக, மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் செயல்படாமல் உள்ளதால் கர்ப்பிணிகள் தவித்து வருகின்றனர். கடந்த மாதம் 24ம் தேதி, சீலநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சங்கீதா, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வந்த போது, மருத்துவமனை நிர்வாகம் ஒன்றரை மணி நேரம் அலைகழிக்க வைத்து, அறுவை சிகிச்சை அரங்கம் வெடித்துவிட்டது என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.  

அதே ேபால், கடந்த அக்டோபர் 31ம் தேதி, ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு, 4 மணி நேரம் வரை எந்தவித மருத்துவ முதலுதவியும் செய்யவில்லை., இதனையடுத்து, அவர்கள் தர்மபுரி மருத்துவமனைக்கு சென்றனர். அதே ேபால் 5ம்தேதி, ஒகேனக்கல்லைச் சேர்ந்த அன்புமணியின் மனைவி சுகந்திக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால், நேரடியாக தலைமை மருத்துவ அலுவலரை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, நேரில் வந்தால் விளக்கம் சொல்வதாகவும், போனில் பேச முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களும் வேறு மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

எனவே, கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்காமல், மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் பென்னாகரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது  மாவட்ட மருத்துவ அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: