சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ. 13ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி, நவ. 8: திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி வரும் 13ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று  (8ம் தேதி) கோலாகலமாகத் துவங்குகிறது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் வரும் 13ம்  தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு  யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து  சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச  மண்டபத்திற்கு எழுந்தருளுதலும், தீபாராதனையும் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு  திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்,  வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து  சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம்  செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் மாவட்டம் முழுவதிலிமிருந்து  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால் அன்று மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையாளர் பாரதி உள்ளிட்டோர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: