குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தோகைமலை, நவ.2:  தோகைமலை அருகே குடிநீர் கேட்டு தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் உள்ள மணச்சணம்பட்டி நாயக்கர் தெரு பகுதியில்  25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கை பம்பு ஒன்று, மினி டேங்கு மூலம் போர்வெல் குடிநீர் என குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் மினி டேங்க்கிற்கு வந்த போர்வல் மின் மோட்டார் பழுதானதாக கூறி அந்த மின்மோட்டாரை கழற்றி சென்றதால் கடந்த 1 வருடங்களுக்கு மேலாக குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மணிச்சங்குளத்தில் இருந்து வந்த போர்வெல் பழுதானதால் அங்கிருந்து வந்த குடிநீரும் கடந்த 3 மாதங்களாக இப்பகுதியினருக்கு கிடைக்க வில்லை. இதுகுறித்து தோகைமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தோகைமலை பிடிஓ ராணி  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் 2 நாட்களில் மின் மோட்டார் சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை விலக்கி கொண்டு கலைந்து சென்றனர்.

Related Stories: