வீரராக்கியத்தில் சிறப்பு முகாம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

கரூர், நவ. 2: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 2வது காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இதன் தலைவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை தலைமையில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜ்னா திட்டத்தின்கீழ் மின்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மக்களுக்கு முறையாக சேவை செய்வது, வேளாண்மைத்துயின் சார்பாக விவசாயிகளுக்கு மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை அமைத்துக் கொடுப்பது என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2017- 18ம் நிதியாண்டில் முடிக்கப்பட்ட பணிகள் போக மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு 2018- 19ம் நிதியாண்டிற்கான நிதியினை பெற வேண்டும் என தெரிகப்பட்டது. கூட்டத்தில் எம்எல்ஏ கீதா, திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குநர் ஜெயந்தி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: