கரூர் தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் சந்தை துவக்கம்

கரூர், நவ. 2: கரூர் தளவாப்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரிச்சந்தை செவ்வாய் அன்று தொடங்கியது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் தொடங்கிய இச்சந்தையை கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

செவ்வாய், புதன் நடைபெற்ற இந்த சந்தையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சார்பில் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தன. பொருட்களை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் வாங்கினர். ஏற்பாடுகளை மேலாண்மைத்துறை தலைவரும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் ஆலோசகருமான முனைவர் சியாம்சிந்தர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி, துணை ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி மற்றும் மேலாண்மை துறை பேராசிரியர்கள் செய்தனர்.

Related Stories: