கரூர் தாலுகா அலுவலகம் முன் வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர், நவ. 2: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் கரூர் மாவட்டம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கருணாகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். சுரேஷ்குமார்நன்றி கூறினார், அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15700 கிராம உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கிராம உதவியாளர்களுக்கு கடைசிமாத ஊதியத்தில் 50 சதவீத கணக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: