ஊர்மேலழகியானில் பண்ணை மகளிர் தின விழா

நெல்லை, நவ. 2:  கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் வேளாண் அறிவியல் மையத்தில் பண்ணை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி உதவி வேளாண் இயக்குநர் கனகாம்பாள் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் பிரதீபா வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி மேலாளர் கிருஷ்ணவேணி, ஸ்வீடீ உமா மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜானகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி மகளிர் விவசாயிகள், தொழில் முனைவோர் காந்திமதி, செல்வமணி, சமுத்திரக்கனி, பாலா, சீதையம்மாள், சித்ரா ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் 72 பண்ணை மகளிர்கள், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு  மாணவிகள் பங்கேற்றனர். பேச்சு, கவிதை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் இளவரசன் (தோட்டக்கலை) நன்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர் மோனிகா (வேளாண் விரிவாக்கம்), திருமலை செல்வி (மனையியல்) ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: