சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பை, நவ. 2: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை மற்றும் உணவு மானிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் மகபூப் பாட்ஷா தலைமை வகித்தார். அரசு ஊழியர் வட்ட கிளை செயலாளர் ரத்னவேல் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க தலைவர் ராஜகோபால் வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலைவர் அல்லாப்பிச்சை, பீட்டர் லியோனார்டு, நாகேசி ஆகியோர்  கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஜெசிந்தா நன்றி கூறினார். நாங்குநேரியில் யூனியன் அலுவகம் முன்  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். செயலாளர் சாலமோன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இதேபோல் வாசுதேவநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சண்முகானந்தம் முன்னிலை வகித்தார்.ஒன்றிய பொருளாளர் பல்கிஸ் பேகம் நன்றி கூறினார். கடையம் யூனியன் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பொன் ஷீலா வரவேற்றார். மாவட்ட தலைவர் பிச்சுமணி பேசினார், அம்பை  அரசு ஊழியர் சங்க செயலாளர் ரத்னவேல், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கவிதா, கனி ஆகியோர் பேசினர். மூவாயிரம் நன்றி கூறினார். மானூர் ஒன்றிய அலுவலகத்தில் கோமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சிராஜூதின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட பொருளாளர் வீரராஜ், ஒன்றிய துணை தலைவர் மருதுபாண்டி ஆகியோர் பேசினர். இணை செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

சங்கரன்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன், புஷ்பவள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பீட்டர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மைதீன் பட்டாணி, செயலாளர் வேல்ராஜன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜையா, காமராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கணேசன், சண்முகசுந்தரம், சவுந்திரபாண்டியன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சமூக நலத்துறை மாநில பொதுச்செயலாளர் துரைசிங்கம் நிறைவுரை ஆற்றினார். வசந்தராஜ் நன்றி கூறினார்.

Related Stories: