செங்கோட்டையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்

செங்கோட்டை, நவ. 2:  செங்கோட்டையில் நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசராஜா தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா வரவேற்றார். நகர அவைத்தலைவர் தங்கவேலு, பால் கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் நகர துணை செயலாளர் பூசைராஜா, பொருளாளர் ராஜா, நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் கணேசன், மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், நகர மகளிரணி இந்திரா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன், பாசறை செயலாளர் மாறன், கோவிந்தன், அய்யப்பன், பாலசுப்பிரமணியன், அரிகரன், ராஜகோபால், ஐயப்பன், கணேசன், சக்திவேல், செண்பகம், லிங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: