நடிகர் சங்க கட்டிட பணி 6 மாதத்தில் முடிவடையும்

சேலம், நவ.2: நடிகர் சங்க கட்டிட பணி இன்னும் 6 மாதத்தில் முடிவடையும் என சேலத்தில் நடிகர் சரவணன் கூறினார்.தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நடிகர்களுக்கு தீபாவளியையொட்டி வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது. சேலத்தில் நேற்று  நடந்த நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர் கலில் வரவேற்றார். நடிகர் சரவணன் கலந்து கொண்டு 150 நடிகர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘நடிகர் சங்க கட்டிடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 அல்லது 6 மாதத்தில் பணிகள் முடிந்து திறக்கப்படும். இதற்காக துபாய், லண்டன் ஆகிய இடங்களில் நடிகர்களின் கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தலைவர், செயலாளர் பொறுப்பேற்றது முதல் சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் நலிந்த கலைஞர்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது,’ என்றார். நிகழ்ச்சியில் நடிகர் பெஞ்சமின் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: