வித்யாவிகாஸ் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருச்செங்கோடு, நவ.2: திருச்செங்கோடு வித்யாவிகாஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி மற்றும் ஆக்ஞை தீட்சை வழங்கப்பட்டது.உடல் ஆரோக்கியம், நல்லொழுக்கம், மனஅமைதி, நினைவாற்றலை அதிகப்படுத்துதல் போன்ற பல்வேறு பயன்களை மாணவர்கள் பெற்று, கல்வி மற்றும் அனைத்து பண்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில், இந்த யோகா பயிற்சி வழங்கி, ஆக்ஞை தீட்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு யோகா துணை பேராசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக உலக சமுதாய சேவா அமைப்பின் யோகா பேராசிரியர் மணி, மனவளக்கலை மன்ற யோகா பேராசிரியர் ரமேஷ், வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு, யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து பயிற்சி அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர்  குணசேகரன், தாளாளர் சிங்காரவேல், நிர்வாக அறங்காவலர்கள் ராமலிங்கம், முத்துசாமி, கல்லூரி முதல்வர் சாமிதுரை, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். யோகா துணை பேராசிரியர் பாலா நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை கல்லூரியின் மனவளக்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் திவ்யபாரதி, யோகா துணை பேராசிரியை லோகநாயகி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: